Kandha Guru Kavasam Lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil By Sulamangalam Sisters

Kandha guru kavasam lyrics in tamil brings you a deeply revered Tamil devotional hymn composed by Sri Saanthanantha Swamigal. Dedicated to Lord Murugan as the Supreme Divine Guru (Kandha Guru), this sacred protective shield (Kavasam) is recited by devotees to seek spiritual protection, mental clarity, divine guidance, and inner peace. Chanting these verses helps dissolve fear, overcome obstacles, and establish a profound connection with Lord Murugan.

Song Details

FeatureDetails
Composition NameKandha Guru Kavasam (கந்த குரு கவசம்)
GenreClassical Devotional Hymn / Protective Armor Prayer
LanguageTamil
Author / SaintSri Saanthanantha Swamigal
SingersSulamangalam Sisters, Mahan D. Vasudevan, Veeramani Dasan
Music Director / TraditionTraditional Tamil Devotional Recitation / Carnatic Chants
ThemeSeeking Lord Murugan as the Supreme Guru for protection, wisdom, and spiritual enlightenment
Famous ForIts soothing, powerful poetic rhythm and its specific invocation of Lord Murugan in His role as the Divine Teacher

Kandha Guru Kavasam Lyrics in Tamil

🙏 ஸ்கந்த குரு கவசம் 🦚
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே 🙏🪷
முஷிக வாகனனே மூலப் பொருளோனே 🐭✨
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே 📿🙏

திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் 🙏🛡️
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் 🐘🌺
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் 🐘🙏
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் 🌺🪷

அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. 🛡️🙏
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் 🙏🦚
சரவணபவ குகா சரணம் சரணம் 🌺🙏
குருகுகா சரணம் குருபரா சரணம் 🪷🙏

சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் 🙏🌺
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே 🕉️✨
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே 📿💡
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் 🙏🦚

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் 🙏✨
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே ❤️🪷
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் 🌸🙏
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா 🙏📿

ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ 🦚🙏
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா 🛡️🙏
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா 🌺🪷
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி 🙏🦚

போற்றி போற்றி முருகா போற்றி 🌸🙏
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் 🪷✨
தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய் ❤️🙏
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் 🛕🪷

சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை 🕉️🙏
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம் 💡📿
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே 🦚🌊
ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண 🪔✨

அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய் ❤️🙏
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே 🪷🌺
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய் 🔱🙏
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ⚔️🛡️

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே 🙏🌊
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா 🪔✨
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய் 🌟🙏
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய் 🦚📿

செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் 🙏🌺
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே 🛕🙏
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா 🪷✨
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும் 🙏🌸

திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் 🔱🛡️
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை 🙏🪔
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் 🔱⚔️
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே 🙏🌺

எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ 🦚✨
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் 💡🙏
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா 🪷🙏
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய் 💡✨

திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா 🌊🙏
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய் 🪷🌺
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும் 🔱🙏
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் 🕉️✨

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா 🦚🙏
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர் 🪷✨
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா 🌿🙏
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா 🌺🪔

விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா 🙏🦚
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே 📿🙏
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர் 🪷✨
கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய் 🔱🙏

காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர் ❤️🪷
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் 🦚🙏
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் 💡🙏
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர் 🌺🪷

வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர் 🔱🛡️
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர் 🙏✨
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் 🛡️🦚
ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர் 🙏🪷

அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய் 💡❤️
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய் 🦚🙏
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு 🌸📿
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் 🙏🪷

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே 🪔🙏
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே 💖✨
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான் 🌍❤️
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் 🕉️💗

அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் 🙏🔱
அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய் 🕉️✨
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர் 💖🙏
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் ⚡🪔

வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ 🙏🔱
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ❤️🌸
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ 💪🙏
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே 🛕💖

சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா 🙏🔱
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய் 🛡️🙏
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் 🌿🔥💧
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் 🛡️🙏

உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய் 🕉️✨
யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ 🙏📿
முக்திக்கு வித்தான முருகா கந்தா 🔱🌺
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா 📿🙏

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா 🌸🔱
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய் 🙏🗡️
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய் ❤️🙏
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய் 🔱🕉️

பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ 🙏✨
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ 🕉️🙏
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய் 🛡️🌸
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா 🪔🔱

தேவாதி தேவா சிவகுரோ வா வா வா 🙏🕉️
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா 🗡️🔱
காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய் 🙏✨
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே 🪔📿

மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய் 🕉️🙏
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன் 🛡️🙏
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் 🕊️🔱
உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள் 🙏🌺

அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய் 🕊️✨
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம் 🙏💖
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன் 🌸🙏
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா 📿✨

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு 🕉️🙏
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு 📿✨
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு 🍯🕉️
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு 🪔🙏

அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு 📿✨
அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள் 🙏🔱
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா 🙏🌺
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து 🕉️📿

நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து 🙏✨
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் 🕉️🙏
அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய் 🪔🙏
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ 🛡️🔱

சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள 📿✨
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய் 🙏🕉️
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் 🔱🙏
சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே 🕉️🙏

சிவசத் குருநாதா சிவசத் குருநாதா 🙏🌺
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய் 🙏🔱
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு 🌸🙏
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ⚡🪔

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு 🛡️🔱
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும் 🌅🙏
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும் 🙏✨
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும் 🛡️🌸

தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் 🗡️🙏
மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய் 🙏🔱
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய் 🦚🙏
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய் 🛡️✨

வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே 🦚🔱
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் 🙏🛡️
என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய் 🙏🕉️
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும் ✨🙏

புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் 🪔🕉️
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும் 👁️🔱
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் 🙏🗡️
செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும் 🐓🙏

கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும் 🌺🔱
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும் 🙏🌸
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும் 🔱🙏
பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் 💪🙏

கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும் 🙏🔱
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும் 🗡️✨
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும் 🙏🌺
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும் 🌸🔱

மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் 🕉️🙏
ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும் ❤️🙏
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும் 🛡️🔱
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு 🙏🕉️

இடுப்பை முழங்காலை இணையான கால்களையும் 🛡️🙏
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே 🙏✨
உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய் 🙏🌸
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும் 🛡️🙏

அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர் 🙏🔱
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும் 🪔🕉️
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் 🗡️🙏
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே 🔥🙏

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும் 🕉️📿
க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும் 🙏✨
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா 🕉️📿
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி 💖🙏

Disclaimer

Our website, Tollylyrics.com, is known for covering a wide variety of Kannada, Malayalam, Telugu, and Tamil songs. The lyrics of the Tollywood song “Kandha Guru Kavasam” above are provided as a reference. This is to help readers deeply understand the related content. We have included these lyrics for informative and entertainment purposes only. It is not our intention to infringe any copyright ownerships or derive any financial advantage from the original creation. The inclusion of these song lyrics is permitted under fair use policies. It is acknowledged that the copyright owners have all the rights to the song and its elements, especially lyrics. In case of any issues, authorized right holders like the music artists, distributors, or record labels are urged to contact us. If you believe the use of the lyrics infringes your copyright ownership, we are willing to review the matter and take appropriate action. 

Also read about: Thiruvasagam Lyrics in Tamil By T.M. Soundararajan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top