Kandar Anuboothi lyrics in tamil brings you one of the most profound and spiritually elevating Tamil devotional compositions, written by the 15th-century saint Arunagirinathar. Dedicated to Lord Murugan, Kandar Anuboothi (meaning the “Experience of God”) is an exquisite collection of 51 verses that express the mystic union and supreme realization of the devotee’s soul with the Divine. Chanting these sacred verses is believed to dissolve ego, grant spiritual clarity, and bestow the supreme grace of Lord Murugan.
Song Details
| Feature | Details |
| Composition Name | Kandar Anuboothi (கந்த அநுபூதி) |
| Genre | Classical Devotional Hymn / Vedantic Stotram |
| Language | Tamil |
| Author / Saint | Arunagirinathar |
| Singers | T.M. Soundararajan, Bombay Sisters, Mahan D. Vasudevan |
| Music Director / Tradition | Traditional Tamil Carnatic Recitation / Devotional Chants |
| Theme | Mystic spiritual experience, devotion to Lord Murugan, inner awakening, and liberation |
| Famous For | Its intense philosophical depth, compact 51-verse structure, and status as a masterpiece of Tamil devotional literature |
Kandar Anuboothi Lyrics in Tamil
🦚 ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் 🐓
🙏 பாடும் பணியே பணியா அருள்வாய் 🌺
⚔️ தேடும் கயமா முகனைச் செருவில் 🔱
🐘 சாடும் தனி யானைச் சகோதரனே. 🦚
✨ உல்லாச, நிராகுல, யோக இதச் 🧘
💖 சல்லாப, விநோதனும் நீ அலையோ? 🌸
🙏 எல்லாம் அற, என்னை இழந்த நலம் ✨
🦚 சொல்லாய், முருகா சுரபூ பதியே. 🔱
🌌 வானோ? புனல் பார் கனல் மாருதமோ? 🌊
🧘 ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? 📿
💭 யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் 🙏
🦚 தானோ? பொருளாவது சண்முகனே. ✨
💍 வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும் 👨👩👧👦
⛓️ தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ? 🙏
⚔️ கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும், ⛰️
🔱 தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. 🦚
🌺 மக மாயை களைந்திட வல்ல பிரான் ✨
🦚 முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே 🙏
🏠 அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் 💭
🌌 சகமாயையுள் நின்று தயங்குவதே. 😔
🪷 திணியான மனோ சிலை மீது, உனதாள் 🙏
🌸 அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? 🪷
🙏 .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும் 💖
✨ தணியா அதிமோக தயா பரனே. 🦚
🔥 கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது 🙏
⚔️ இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் 🦚
🔥 சுடுவாய் நெடு வேதனை தூள்படவே ✨
🕊️ விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. 🙏
🏛️ அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் 🧠
📿 பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா ✨
🦚 குமரன் கிரிராச குமாரி மகன் 🌺
⚔️ சமரம் பெரு தானவ நாசகனே. 🔱
🌸 மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் 💖
🕸️ பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்? 🙏
⚔️ தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் 🔱
🦚 நிட்டூர நிராகுல, நிர்பயனே. ✨
🌑 கார் மா மிசை காலன் வரில், கலபத் ⚔️
🦚 தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் 🛡️
🌺 தார் மார்ப, வலாரி தலாரி எனும் ✨
⚔️ சூர்மா மடியத் தொடுவே லவனே. 🔱
😭 கூகா என என் கிளை கூடி அழப் 💔
🙏 போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா ✨
🔱 நாகாசல வேலவ நாலு கவித் 🦚
👑 தியாகா சுரலோக சிகாமணியே. 🙏
🦚 செம்மான் மகளைத் திருடும் திருடன் 🦚
🙏 பெம்மான் முருகன், பிறவான், இறவான் 🙏
🤫 .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே 🤫
💖 அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 💖
🔱 முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று 🔱
✨ அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ✨
🌌 உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, 🌌
💫 இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. 💫
⚔️ கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று ⚔️
🙏 உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் 🙏
👁️ மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் 👁️
🧘 ஐவாய் வழி செல்லும் அவாவினையே. 🧘
📿 முருகன், குமரன், குகன், என்று மொழிந்து 📿
💖 உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் 💖
🌍 பொரு புங்கவரும், புவியும் பரவும் 🌍
🦚 குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. 🦚
💰 பேராசை எனும் பிணியில் பிணிபட்டு 💰
😔 ஓரா வினையேன் உழலத் தகுமோ? 😔
⚔️ வீரா, முது சூர் பட வேல் எறியும் ⚔️
🔥 சூரா, சுர லோக துரந்தரனே. 🔥
📚 யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் 📚
🙏 தாமே பெற, வேலவர் தந்ததனால் 🙏
🌸 பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர் 🌸
✨ நாமேல் நடவீர், நடவீர் இனியே. ✨
🌅 உதியா, மரியா, உணரா, மறவா, 🌅
🙏 விதி மால் அறியா விமலன் புதல்வா, 🙏
🛡️ அதிகா, அநகா, அபயா, அமரா 🛡️
⚔️ பதி காவல, சூர பயங் கரனே. ⚔️
🌺 வடிவும் தனமும் மனமும் குணமும் 🌺
🏡 குடியும் குலமும் குடிபோ கியவா 🏡
⚔️ அடி அந்தம் இலா அயில் வேல் அரசே ⚔️
😔 மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. 😔
✨ அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் ✨
🙏 உரிதா உபதேசம் உணர்த்தியவா 🙏
⚔️ விரிதாரண, விக்ரம வேள், இமையோர் ⚔️
🐍 புரிதாரக, நாக புரந்தரனே. 🐍
🧘 கருதா மறவா நெறிகாண, எனக்கு 🧘
🌸 இருதாள் வனசம் தர என்று இசைவாய் 🌸
🦚 வரதா, முருகா, மயில் வாகனனே 🦚
⚔️ விரதா, சுர சூர விபாடணனே. ⚔️
🙏 காளைக் குமரேசன் எனக் கருதித் 🙏
🛕 தாளைப் பணியத் தவம் எய்தியவா 🛕
🌸 பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் 🌸
⛰️ வேளைச் சுர பூபதி, மேருவையே. ⛰️
😔 அடியைக் குறியாது அறியா மையினால் 😔
🙏 முடியக் கெடவோ? முறையோ? முறையோ? 🙏
⚔️ வடி விக்ரம வேல் மகிபா, குறமின் ⚔️
🌺 கொடியைப் புணரும் குண பூதரனே 🌺
👁️ கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே 👁️
💖 சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ 💖
⚔️ சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் ⚔️
🔥 போர் வேல, புரந்தர பூபதியே. 🔥
🙏 மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து 🙏
😔 ஐயோ, அடியேன் அலையத் தகுமோ? 😔
⚔️ கையோ, அயிலோ, கழலோ முழுதும் ⚔️
🦚 செய்யோய், மயில் ஏறிய சேவகனே. 🦚
🙏 ஆதாரம் இலேன், அருளைப் பெறவே 🙏
😔 நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே 😔
📿 வேதாகம ஞான விநோத, மன 📿
✨ அதீதா சுரலோக சிகாமணியே. ✨
⚡ மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் ⚡
😔 என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? 😔
💎 பொன்னே, மணியே, பொருளே, அருளே, 💎
🦚 மன்னே, மயில் ஏறிய வானவனே. 🦚
🌺 ஆனா அமுதே, அயில் வேல் அரசே, 🌺
📿 ஞானாகரனே, நவிலத் தகுமோ? 📿
🙏 யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் 🙏
✨ தானாய் நிலை நின்றது தற்பரமே. ✨
🌌 இல்லே எனும் மாயையில் இட்டனை நீ 🌌
😔 பொல்லேன் அறியாமை பொறுத்திலையே 😔
⚔️ மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் ⚔️
🔱 சொல்லே புனையும் சுடர் வேலவனே. 🔱
🔴 செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று 🔴
✨ ஒவ்வாதது என உணர்வித் ததுதான் ✨
🧘 அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் 🧘
🙏 எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. 🙏
🌑 பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே 🌑
😔 வீழ்வாய் என என்னை விதித்தனையே 😔
🙏 தாழ்வானவை செய்தன தாம் உளவோ? 🙏
🦚 வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. 🦚
😢 கலையே பதறிக், கதறித் தலையூடு 😢
🌪️ அலையே படுமாறு, அதுவாய் விடவோ? 🌪️
🏹 கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் 🏔️
⛰️ மலையே, மலை கூறிடு வாகையனே. ⛰️
😔 சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் 😔
🌳 விந்தாடவி என்று விடப் பெறுவேன் 🌳
🌊 மந்தாகினி தந்த வரோதயனே 🌊
💖 கந்தா, முருகா, கருணாகரனே. 💖
💃 சிங்கார மடந்தையர் தீநெறி போய் 💃
🙏 மங்காமல் எனக்கு வரம் தருவாய் 🙏
⚔️ சங்க்ராம சிகாவல, சண்முகனே ⚔️
🌊 கங்காநதி பால, க்ருபாகரனே. 🌊
😔 விதிகாணும் உடம்பை விடா வினையேன் 😔
🌸 கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்? 🌸
🌙 மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின் 🌺
🙏 துதியா விரதா, சுர பூபதியே. 🙏
🔱 நாதா, குமரா நம என்று அரனார் 🔱
📿 ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? 📿
🌸 வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் 🌸
👣 பாதா குறமின் பத சேகரனே. 👣
⚔️ கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் ⚔️
🙏 பரிவாரம் எனும் பதம் மேவலையே 🙏
🧘 புரிவாய் மனனே பொறையாம் அறிவால் 🧘
🔥 அரிவாய் அடியோடும் அகந்தையையே. 🔥
😔 ஆதாளியை, ஒன்று அறியேனை அறத் 😔
🙏 தீது ஆளியை ஆண்டது செப்புமதோ 🙏
🏹 கூதாள கிராத குலிக்கு இறைவா 🏹
⚔️ வேதாள கணம் புகழ் வேலவனே. ⚔️
🌌 மாஏழ் சனனம் கெட மாயைவிடா 🌌
🙏 மூஏடணை என்று முடிந்திடுமோ 🙏
🌺 கோவே, குறமின் கொடிதோள் புணரும் 🌺
🔱 தேவே சிவ சங்கர தேசிகனே. 🔱
⚔️ வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் ⚔️
😔 மனையோடு தியங்கி மயங்கிடவோ? 😔
🌊 சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் 🌊
🌾 தினையோடு, இதணோடு திரிந்தவனே. 🌾
🛡️ சாகாது, எனையே சரணங் களிலே 🛡️
🙏 கா கா, நமனார் கலகம் செயும் நாள் 🙏
🦚 வாகா, முருகா, மயில் வாகனனே 🦚
🧘 யோகா, சிவ ஞான உபதேசிகனே. 🧘
🎯 குறியைக் குறியாது குறித்து அறியும் 🎯
📿 நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் 📿
🌌 செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று 🌌
✨ அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. ✨
💎 தூசா மணியும் துகிலும் புனைவாள் 💎
💖 நேசா முருகா நினது அன்பு அருளால் 💖
🔥 ஆசா நிகளம் துகளாயின பின் 🔥
🤫 பேசா அநுபூதி பிறந்ததுவே. 🤫
⚔️ சாடும் தனிவேல் முருகன் சரணம் ⚔️
🙏 சூடும் படி தந்தது சொல்லு மதோ? 🙏
✨ வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம் ✨
🌿 காடும், புனமும் கமழும் கழலே. 🌿
📚 கரவாகிய கல்வி உளார் கடை சென்று 📚
🙏 இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? 🙏
🦚 குரவா, குமரா, குலிசாயுத, குஞ் 🦚
💖 சரவா, சிவயோக தயாபரனே. 💖
🙏 எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ 🙏
💖 சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் 💖
⚔️ கந்தா, கதிர் வேலவனே, உமையாள் ⚔️
🦚 மைந்தா, குமரா, மறை நாயகனே. 🦚
🌺 ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் 🌺
🙏 பேறா அடியேன், பெறுமாறு உளதோ? 🙏
⚔️ சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர் ⚔️
✨ கூறா உலகம் குளிர்வித்தவனே. ✨
🧘 அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் 🧘
🔱 பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? 🔱
🌑 செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய 🌑
⚔️ வெறி வென்றவரோடு உறும் வேலவனே. ⚔️
✨ தன்னந் தனி நின்றது, தான் அறிய ✨
🙏 இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? 🙏
⚡ மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார் ⚡
💖 கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. 💖
😔 மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக் 😔
🌑 கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? 🌑
🌊 நதி புத்திர, ஞான சுகாதிப, அத் 🌊
⚔️ திதி புத்திரர் வீறு அடு சேவகனே. ⚔️
🌌 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் 🌌
🌸 மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் 🌸
✨ கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் ✨
🙏 குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏
Kandar Anuboothi Lyrics in English
🦚 Aadum pari Vel ani cheval yenap, 🦚
🙏 Padum paniye paniyay arulvay, 🙏
⚔️ Thedum kayamaa muganai cheruvil, ⚔️
🐘 Chadum thani yanai sodharane. 🐘
✨ Ullasa nirakula yoga idhach, ✨
💖 Challabha vinodhanum nee yallayo, 💖
🙏 Yellam aara ennai izhanda nalam, 🙏
🦚 Chollay muruga sura bhoo pathiye. 🦚
🌌 Vaano punal paar kanal maaruthamo, 🌌
📿 Jnanodhayamo navil naan marayo, 📿
🧘 Yano manamo, yenai aanda idam, 🧘
🔱 Thaano porul aavathu Shanmugane. 🔱
🌺 Valai patta kaimmathodu, makkal yenum, 🌺
😔 Thalai pattu azhiya thagumo,.thagumo, 😔
⚔️ Kilai pattu ezhu choor uravum giriyum, ⚔️
🔱 Tholai pattu uruvathodu Velavane. 🔱
🌑 Maga mayai kalainthida valla piraan, 🌑
🔱 Mugam aarum mozhindum ozhindilane, 🔱
😔 Agam maadai madantair endru aayarum, 😔
🌌 Chaga mayayul nindru thayanguvathe. 🌌
🧘 Thiniyana manochilai meedu unathal, 🧘
🌸 Ani aar aravindam arumbumatho, 🌸
🙏 Paniya yena valli padam paniyum, 🙏
💖 Thaniya athi moha daya prane. 💖
😔 Keduvay manane gathi kel karavaathu, 😔
⚔️ Iduvay vadi Vel irai thaan ninaivay, ⚔️
🔥 Chuduvay nedu vedanai thool padave, 🔥
🙏 Viduvay viduvay vinai yavaiu may. 🙏
🛕 Amarum pathi kel, agamam enum ip, 🛕
✨ Pimaram keda mey porul pesiyava, ✨
🦚 Kumaran kiri rasa kumaari makan, 🦚
⚔️ Samaram poru danava nasakane. ⚔️
💃 Mattoor choozhal mangayar maiyal valaip, 💃
😔 Pattu oosal padum parisu endru ozhiven, 😔
⚔️ Thattu oodara Vel sayilathu eriyum, ⚔️
🛡️ Nittoora nirakula nirbhayane. 🛡️
🌩️ Kaarma misai kalan varin kalapath, 🌩️
⚔️ Therma misaim vandu yedirapaduvai, ⚔️
🛡️ Thaar maarba valaari thalaari yenum, 🛡️
⚔️ Soormaa madiya thodu Velavane. ⚔️
😢 Kookaa yena yen kilai koodi azhap, 😢
🙏 Pokaa vagai mey porul pesiyava, 🙏
🔱 Nagachala Velavaa nalu kavith, 🔱
✨ Thyaga sura loka shikamaniye. ✨
🐘 Chemman magalai thirudum thirudan, 🐘
✨ Pemman murugan piravaan iravaan, ✨
🤫 Chumma iru chol aara endralume, 🤫
🙏 Aamma porul ondrum arindilane. 🙏
⚔️ Murugan thani Vel, muni nam guru endru, ⚔️
🙏 Arul kondu ariyar ariyum tharamo, 🙏
🌌 Uru andru, aaru andru, ulathu andru, ilaathu andru, 🌌
✨ Irul andru, oli andru yena nindrathuve. ✨
⚔️ Kai vay kadir Vel murugan kazhal pethu, ⚔️
🙏 Uyvay manane ozhivay ozhivay, 🙏
👁️ Mey vay vizhi nasi yodum cheviyaam, 👁️
🧘 Aiwai vazhi chollum aavaa vinaye. 🧘
📿 Murugan, kumaran Guhan endru mozhindu, 📿
💖 Urugum cheyal thanthu unaruv endru arulvay, 💖
🌍 Poru punga varum puviyum paravum, 🌍
✨ Guru pungava enguna panjarane. ✨
💰 Perasai enum piniyil pettu, 💰
😔 Oraa vinayen uzhala thagumo, 😔
⚔️ Veera mudu choor pada Vel eriyum, ⚔️
🔥 Soora sura loka durandarne. 🔥
📚 Yaam odhiya kalviyum, yem arivum, 📚
🙏 Thaame pera Velavar thandathanaal, 🙏
🌸 Poo mel mayal poy aara mey punarveer, 🌸
✨ Naa mel nadaveer, Nadaveer iniye. ✨
🌅 Udiyaa mariyaa unaraa maravaa, 🌅
🙏 Vidhi maal ariya vimalan pudalvaa, 🙏
🛡️ Aadhikaa, aanakaa aabhayaa aamaraa, 🛡️
⚔️ Vadhi kavala soora bhayangarane. ⚔️
🌺 Vadivum dhanavum manamum gunamum, 🌺
🏡 Kudiyum kulavum kudi pokiyava, 🏡
⚔️ Adi andham ilaa ayil Vel arase, ⚔️
😔 Midi endru oru paavi Velippadine. 😔
✨ Arithagiya mey porulukku adiyen, ✨
🙏 Urithaa upadesam unarthiyava, 🙏
⚔️ Viritharana vikram Vel emayor. ⚔️
🐍 Puri tharaka naga purandarane. 🐍
🧘 Karuthaa maravaa neri kana enakku, 🧘
🌸 Iru thaal vanasam thara endru isaivai, 🌸
🦚 Varada, Muruga, Mayil Vaganane, 🦚
⚔️ Viradha Soora veera vibhadanane. ⚔️
🙏 Kalai Kumaresan yena karudhi, 🙏
🛕 Thalai paniya thavam yeythiyava, 🛕
🌸 Palai kuzhal Valli padam paniyum, 🌺
⛰️ Velai sura bhoopahi meruvaye. ⛰️
😔 Adiyai kuriyathu ariyamamayinal, 😔
🙏 Mudiya kedavo murayo murayo, 🙏
⚔️ Vadi vikrama Vel makiba kuramin, ⚔️
🌺 Kodiyai punarum guna bhoodarane. 🌺
👁️ Koor Vel vizhi mangayar kongayile, 👁️
💖 Cherven, arul cheravum ennumatho, 💖
⚔️ Choor verodu kundru tholaitha nedum, ⚔️
🔥 Por Vela purandara bhoopathiye. 🔥
🙏 Meyye yen vevvinai vazhvai ukandu, 🙏
😔 Iyo adiyen alaya thagumo, 😔
⚔️ Kaio ayilo kazhalo muzhudum, ⚔️
🦚 Cheyyoy mayil yeriya chevagane. 🦚
🙏 Aadaram ilen, arulai perave, 🙏
😔 Nee thaan chathum ninaindu ilaye, 😔
📿 Vedagama gnana vinoda mano. 📿
✨ Theethaa, sura loka shikamaniye. ✨
⚡ Minne nigar vazhvai virumbiya yaan, ⚡
😔 Yenne vidhiyin payan ingu idhuvo, 😔
💎 Ponne, maniye, porule, arule, 💎
🦚 Manna mayil yeriya vahanane. 🦚
🌺 Aanaa, amuthee ayal Vel arase, 🌺
📿 Jnana karane, navila thagumo, 📿
🙏 Yaan aagiya yennai vizhungi verum, 🙏
✨ Thanai nilai nindrathu tharparame. ✨
🌌 Ille yenum mayayil ittanai nee, 🌌
😔 Pollean ariyamai poruthu illaye, 😔
⚔️ Malle puri panniru vaguvil yen, ⚔️
🔱 Cholle punayum sudar Velavane. 🔱
🔴 Chevvan uruvil thigazh Velavan andru, 🔴
✨ Ovvaathathu yena unarvithathu thaan, ✨
🧘 Avvaru arivaar arikindrathu allal, 🧘
🙏 Yevvaru oruvarkku isaivippaduve. 🙏
🌑 Paazh vaazhvu yenum eppadu mayayile, 🌑
😔 Veezhvay yena ennai vidithanaye, 😔
🙏 Thazhvanavai cheythanathaam ulavo, 🙏
🦚 Vazhvay ini nee mayil vahanane. 🦚
😢 Kalaye padari kadari thalai yudu, 😢
🌪️ Alaye padumaaru aaduvay vidavo, 🌪️
🏹 Kolaye puri vedar kula pidithoy, 🏔️
⛰️ Malaye malai kooridu vagayane. ⛰️
😔 Chinthakula illodu chelvam yenum, 😔
🌳 Vindhadavi endru vida peruven, 🌊
🌊 Mandakini thanda varodayane, 🌺
💖 Kanda muruga karunakarane. 💖
💃 Singara madanthayar thee neri poy, 💃
🙏 Mangamal yenakku varam tharuvay, 🙏
⚔️ Sangrama shikavala shanmugane, ⚔️
🌊 Ganga nadhi, bala krupakarne. 🌊
😔 Vidhi kaanum udambay vidaa vinayen, 😔
🌸 Gathi kaana malar kazhal endru arulvay, 🌸
🌺 Madivaal noodal valliyai allathu pin. 🌺
🙏 Thudhiya viradar sura bhoopathiye. 🙏
🔱 Nadhaa, Kumaraa nama, endru aaranaar, 🔱
📿 Oodhaa yena odhiyathu yepporul thaan, 📿
🌸 Vedaa mudal vinnavar choodumalarp, 🌸
👣 Pada kuramin pada shekharane. 👣
⚔️ Kirivay vidu vikrama Vel irayon, ⚔️
🙏 Parivaram yenum padam mevalaye, 🙏
🧘 Purivay manane porayaam arival, 🧘
🔥 Arivay adiyodu aganthayaiye. 🔥
😔 Aathaaliyai ondru ariyenai arath, 😔
🙏 Theethaaliyai aandathu cheppu matho, 🙏
🏹 Koodaala kirada kulikku iraiva, 🏹
⚔️ Vethala kanam pukazhum Velane. ⚔️
🌌 Maa yezh chananam keda mayai vidaa, 🌌
🙏 Moovedanai endru mudithidumo, 🙏
🌺 Kove kuramin kodithol punarum, 🌺
🔱 Deva shiva shankara desikane. 🔱
⚔️ Vinai oda vidum kadir Vel maraven, ⚔️
😔 Manayodu thiyangi mayangidavo, 😔
🌊 Chunayodu, aruvi thurayodu, pasun, 🌊
🌾 Thinayodu, ithanodu thirinthavane. 🌾
🛡️ Chakaathu yenaiye charanangalile, 🛡️
🙏 Kaka namanaar kalakam cheyum naal, 🙏
🦚 Vakaa muruga, mayil vahanane, 🦚
🧘 Yoga siva jnana upadesikane. 🧘
🎯 Kuriyai kuriyathu kurithu ariyum, 🎯
⚔️ Neriyai thani Velai nigazhthidalum, ⚔️
🌌 Cherivathu ulagodu urai chinthayum athu, 🌌
✨ Arivu athu, ariyamayum athadhuve. ✨
💎 Thoosaa maniyum thugilum punaival, 💎
💖 Nesa murugaa ninathu anbu arulaal, 💖
🔥 Aasaa nigalam thugal aayina pin, 🔥
🤫 Pesaa anubhuthi piranthathuve. 🤫
⚔️ Chadum thani Vel murugan charanam, ⚔️
🙏 Choodumpadi thanthathu chollumatho, 🙏
✨ Veedum churar maamudi vedamum vem, ✨
🌿 Kadum punamum kamazhum kazhale. 🌿
📚 Karavagiya kalvi ular kadai chendru, 📚
🙏 Irava vagai mey porul eeguvaiyo, 🙏
🦚 Kurava, kumara, kulisayudha kunch 🦚
💖 Charava, siva yoga daya parane. 💖
🙏 En thaayum, yenakku arul thanthayum nee, 🙏
💖 Chinthakulam aanavai theertha yenai aal, 💖
⚔️ Kanda, kadir Velavane, umayal, ⚔️
🦚 Maintha, kumara, marai nayakane. 🦚
🌺 Aaraarayum neethu, athan mel nilayai, 🌺
🙏 Pera adiyen peramaru uladho, 🙏
⚔️ Cheera varuchoor chidaivithu imayor, ⚔️
✨ Kooraa ulagam kulirvithavane. ✨
🧘 Arivu ondru ara nindru ariyar arivil, 🧘
✨ Pirivu ondru ara nindra piraan aalayo, ✨
🌑 Cherivu ondru ara vandu irule chidhaya, 🌑
⚔️ Veri vendravarodum urum Velavane. ⚔️
✨ Thannam thani ninrathu thaan aariya, ✨
🙏 Innam oruvarkku isaivippathu vo, 🙏
⚡ Minnum kadir Vel vigirtha ninaivar, ⚡
💖 Kinnam kalayum krupai choozh chudare. 💖
😔 Madhi kettu aravaadi mayangi arak, 😔
🌑 Kadhi kettu avame kedavo kadaven, 🌑
🌊 Nadhi puthira jnana sukadhipa ath. 🌊
⚔️ Thithi puthirar veeru adu chevakane. ⚔️
🌌 Uruvay aaruvau ulathay ilathay, 🌌
🌸 Maruvay malaray maniyay oliyay, 🌸
✨ Karuvay uyiray kathiyay vidhiyay, ✨
🙏 Guruvay varvay, arulvay Guhane. 🙏
Disclaimer
Our website, Tollylyrics.com, is known for covering a wide variety of Kannada, Malayalam, Telugu, and Tamil songs. The lyrics of the Tollywood song “Kandar Anuboothi” above are provided as a reference. This is to help readers deeply understand the related content. We have included these lyrics for informative and entertainment purposes only. It is not our intention to infringe any copyright ownerships or derive any financial advantage from the original creation. The inclusion of these song lyrics is permitted under fair use policies. It is acknowledged that the copyright owners have all the rights to the song and its elements, especially lyrics. In case of any issues, authorized right holders like the music artists, distributors, or record labels are urged to contact us. If you believe the use of the lyrics infringes your copyright ownership, we are willing to review the matter and take appropriate action.
Also read about: Abirami Anthathi Lyrics in Tamil By T.M. Soundararajan

